Go to ...
RSS Feed

கணவர் மறைவுக்கு பின் அரசியலில் குதிக்கும் நடிகை


கணவர் மறைவுக்கு பின் அரசியலில் குதிக்கும் நடிகை

2/14/2019 12:10:24 PM

தமிழில் ப்ரியா, தாய் மீது சத்தியம் படங்களில் நடித்தவர் அம்பரீஷ். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மனைவி நடிகை சுமலதா. அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில்  மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்பி யாக பணியாற்றியவர். அவரது மறைவுக்கு பின் சுமலதாவும் அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்.

கணவர் போட்டியிட்ட மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். அம்பரீஷ், சுமலதா இருவருமே ரஜினியுடன் தமிழ் படத்தில் நடித்துள்ளனர். ப்ரியா, தாய் மீது சத்தியம் படங்களில் அம்பரிஷும், ‘முரட்டுக்காளை’, ‘கழுகு’ படங்களில் சுமலதாவும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran