Press "Enter" to skip to content

அம்பானி வீட்டில் அடுத்த திருமணம்: ரூ.1.5 லட்சத்தில் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ்- இணையப் பயனாளர்கள் விமர்சனம்

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இஷா அம்பானி – ஆனந்த் பிராமலின் பிரம்மாண்டத் திருமணத்தைத் தொடர்ந்து, இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

அவரின் சிறுவயதுத் தோழிரும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஷ்லோகா மேத்தாவை ஆகாஷ் அம்பானி மணக்கிறார். இந்நிலையில் இருவரின் திருமண அழைப்பிதழ் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அழகிய இளஞ்சிவப்பு நிறப் பெட்டிக்குள் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேல்புறத்தில் சூரிய ஒளியில் தாமரைகள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்களுக்கு நடுவே ராதையும் கிருஷ்ணரும் இருக்கின்றனர். அதைத் திறந்தவுடன், மேல் பகுதியில் வெள்ளி ஃப்ரேமில் ராதா கிருஷ்ண படம்  வைக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்தவுடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிகின்றன.

அழைப்பிதழ் காணொளி

 

அடுத்ததாக ரதத்தில் இருக்கும் வெண்ணிற விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக முகேஷ் அம்பானி- நீதா தம்பதியின் அழைப்புஉள்ளது. இந்த அழைப்பிதழை மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலில் நீதா அம்பானி வைத்து ஆசிபெற்றார். அதைத் தொடர்ந்து பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஆடம்பரமாக உள்ள அழைப்பிதழுக்கு இணையப் பயனாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »