Go to ...
RSS Feed

Thala Ajith: ‘தேவையில்லாத ரிஸ்க்’ எதுக்கு தயங்கும் தயாரிப்பாளர்…. தள்ளிப்போகிறதா ‘தல’ அஜித்தின் ‘பிங்க்’ மறுதயாரிப்பு….!


Highlights

‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’காக திகழும் அஜித்துடன் நேரடியாக மோத வேறு எந்த பட தயாரிப்பாளரும் தயங்குவார் என்பதால், அஜித்தின் பட வெளியீடு தேதி வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.

சென்னை: அஜித் நடிக்கும் பிங்க் பட மறுதயாரிப்பு பட வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் பட மறுதயாரிப்புகில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

அமிதாப் பச்சன் கதாபாத்திரம்:

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கவுள்ளார். ஆனால் அமிதாப் பச்சனுக்கு அந்த கதாபாத்திரம் சரியாகயிருந்தது. ஆனால் மாஸ் கதாநாயகனான அஜித் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்காது என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

மாஸ் ஹிட்:

குறிப்பாக விஸ்வாசம் படம் போன்ற மாஸ் ஹிட் படத்தை அடுத்து வெளியாகும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எகிறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வினோத் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையை மாற்றி அமைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் பரிசு:

இந்நிலையில் இப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரசிகர்களுக்கு பரிசாக வெளியீடு செய்யப்படலாம் என படக்குழுவினர் திட்டமிட்ட்டிருந்த நிலையில், நேற்று சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் மே 1ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

Ajith Kumar

‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’:

ஒருவேளை அஜித்தின் பிங்க் ரிமேக் பட வெளியீடும் அதே தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’காக திகழும் அஜித்துடன் நேரடியாக மோத வேறு எந்த பட தயாரிப்பாளரும் தயங்குவார் என்பதால், அஜித்தின் பட வெளியீடு தேதி வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.

Our #MrLocal Releasing Worldwide On MAY 1st 2019 @StudioGreen2 @Siva_Kartikeyan @hiphoptamizha @actorsathish… https://t.co/HREaaNYGat

— Rajesh M (@rajeshmdirector)

1550064773000

அப்படி எல்லாம் இல்லை:

ஆனால் இதே போல ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படம் ஒன்றாக ரிலீஸான போது கண்டிப்பாக ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற விமர்சகர்களின் கருத்து ஒட்டுமொத்தமாக பொய்யாகி இரண்டு படங்களும் நல்ல வசூல் செய்ததால், ஒருவேளை பிங்க் மறுதயாரிப்பு, மிஸ்டர் லோக்கல் படம் ஒன்றாக ரிலீஸாக வாய்ப்புள்ளது.

Source: samayam