Press "Enter" to skip to content

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் சங்கிலி மின்னேற்றி சேவை 2 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். குன்றின் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல, பக்தர்களின் வசதிக்காக  சங்கிலி மின்னேற்றி, மின் இழுவை தொடர் வண்டிபோன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சங்கிலி மின்னேற்றி சேவை இன்றும், நாளையும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  சங்கிலி மின்னேற்றி சேவை நிறுத்தி வைக்கப்படுவதால், பக்தர்கள் மின் இழுவை ரயில், மற்றும் படிப்பதையை பயன்படுத்தும் படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, திருவாதிரை உற்சவவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை பார்வை செய்வது வழக்கம். திருவிழா மட்டுமின்றி வாரவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். எனவே பக்தர்களின் வசதிக்காக  சங்கிலி மின்னேற்றி, மின் இழுவை தொடர் வண்டிபோன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சங்கிலி மின்னேற்றி சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது என கோவில் நிற்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் வாரவிடுமுறையுடன் சுபமுகூர்த்த தினமும் ஒன்றாக வந்த நிலையில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக படியில் நின்று காத்திருந்து முருகனை பார்வை செய்தனர். சங்கிலி மின்னேற்றி, மின் இழுவை தொடர் வண்டிஎன அனைத்து வழி போக்குவரத்திலும் பக்தர்கள் அலைமோதினர். இந்நிலையில் தற்போது இந்த சங்கிலி மின்னேற்றி, மின் இழுவை தொடர் வண்டிபராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »