Press "Enter" to skip to content

காங்கிரஸ் கூட்டணி இல்லாமலே டெல்லியில் வெற்றி பெறுவோம்: கேஜ்ரிவால் கருத்து

காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமலேயே மக்களவைத் தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்கவில்லை. கூட்டணி சேர நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், காங்கிரஸ் அதற்கு முன்வரவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமலேயே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இது ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. வரும் தேர்தலில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எங்களின் முக்கிய பிரச்சாரமாக இருக்கும். இதுவரை மக்களவைத் தேர்தலில் டெல்லி வாக்காளர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர். ஆனால், இந்த முறை டெல்லிக்கு மாநில அந்தஸ்துக்காக ஓட்டளிக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »