Press "Enter" to skip to content

5 நாள் தொடர் விடுமுறை: வாக்குப்பதிவு குறையும் என கட்சியினர் கவலை

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்.18-ம் தேதி நடைபெறஉள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான மகாவீர் ஜெயந்தி ஏப்.17 அன்றும், புனிதவெள்ளி ஏப்.19 அன்றும் வருவதால் தேர்தலுக்கு முதல் நாளும், தேர்தலுக்கு மறுநாளும் அரசு ஊழியர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது.

தேர்தலை முன்னிட்டு ஏப்.18 அன்றும் பொதுவிடுமுறை விடப்படும். அத்துடன் சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்தால் ஏப்.17-ம் தேதி முதல் ஏப்.19-ம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையால், சென்னையில் உள்ள வெளி மாவட்டத்தினர் சொந்த ஊர்களுக்கு செல்வர். இந்நிலையில் ஏப்.18 அன்று தேர்தல் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் வாக்குப்பதிவு வெகுவாக குறையும் என்பதால் அரசியல் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »