Press "Enter" to skip to content

கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு; பாமக – தேமுதிகவுடன் அதிமுக பேச்சு: உடன்பாடு ஏற்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை அதிமுக – பாமக – தேமுதிக இடையில் தொடர்கிறது. அடுத்த சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தமிழகத்தில் மட்டும் 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகளில், 7 தொகுதிகள் பாமகவுக்கும், 5 தொகுதிகள் பாஜகவுக்கும், 4 தொகுதிகள் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் அதிமுக அலுவலகத்தில் தொகுதி உடன்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், புதிய நீதிக்கட்சிக்கு வேலூர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்களே தெரிவித்துள்ளனர். மேலும், புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதியும் ஒதுக் கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

இவை தவிர, அதிமுக தனக்கான தொகுதிகளை ஏற்கெனவே இறுதி செய்து வைத்துள்ளது. ஆனால், தேமுதிக, பாமக, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பாக அந்த கட்சிகளே பேசி முடிவெடுக்கும்படி அதிமுக விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனாலேயே, நேற்று முன்தினம் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.

குறிப்பாக, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி,விருதுநகர் தொகுதிகளில் வடசென்னையை அக்கட்சி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதில், அதிமுக வசம் உள்ள கிருஷ்ணகிரியைக் குறிவைக்கிறது. அதேபோல், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் தொகுதிகளில் மத்திய சென்னையை பாமக விரும்பவில்லை. அதற்கு பதில், அக்கட்சியும் கிருஷ்ணகிரியைக் கேட்கிறது.

அதிமுக தரப்பில் கிருஷ்ணகிரியை அளிப்பதாக முன்வந்தால், அதை யாருக்கு கொடுப்பது என்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக, பேசவே, நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மற்றும் தமிழக அமைச்சர் பி.தங்கமணி, எஸ்.பி.

வேலுமணி ஆகியோர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து மூன்று கட்சிகள் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையை நிறைவு செய்து,ஞாயிற்றுக்கிழமை தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிஅறிவிக்க அதிமுக முடிவெடுத் துள்ளது. இதற்கிடையில், தொகுதி பங்கீடு பட்டியலை திமுக இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதால், அதை பொறுத்தும் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மாறலாம் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »