Press "Enter" to skip to content

கடைசி மாதத்தில் 150 திட்டங்களா?- சத்ருகன் சின்ஹா விமர்சனம்

image

பாட்னா எம்.பி.யும் பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அவர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஆட்சி நிறைவடையும் கடைசி மாதத்தில் 150 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதிமீறல் ஆகாது. இருந்தாலும் இது ஏமாற்று வேலை. புதிய தலைமை பொறுப்பேற்க இதுதான் பொருத்தமான நேரம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக அதிருப்தி தலைவரான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் அல்லது ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »