Press "Enter" to skip to content

பலமான இயக்கம் என்பதால் அதிமுகவுக்கு ஆதரவு என என்.ஆர்.தனபாலன் தகவல்

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, 2 முறையும் தோல்வி அடைந்தார். ஆனாலும், திமுக தோழமைக் கட்சியாகவே பெருந்தலைவர் மக்கள் கட்சி நீடித்து வந்தது.

இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர்.தனபாலன் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட நான் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். எனவே, மீண்டும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பு கேட்டேன். ஆனால், அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. தொடர்ச்சியாக தொடர்பு கொண்டும், சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

வரும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற நிலையில், மக்கள் பணிசெய்ய பலமான இயக்கத்துடன் இணைய வேண்டும் என்று அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »