Press "Enter" to skip to content

சிவகங்கையில் ஆயிரம் புதிய வாக்காளர்கள் மாயம்: தேர்தல் அதிகாரிகள் மீது அதிமுக புகார்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 6 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஜன.31-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதேபோல் நகராட்சி முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக பூத் குழு உறுப்பினர் மாரிமுத்து சிவகங்கை தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ஜெயகாந்தனிடம் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து மாரிமுத்து கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பெயர்கள் காணவில்லை. நகராட்சி ஆணையரிடம் கேட்டால் அவர்களது பெயர்கள் வெவ்வேறு பாகங்களில் உள்ளதாக கூறுகிறார். புதிய வாக்காளர்களின் பெயர்கள் இருக்கும் விவரமே தெரியாத நிலை உள்ளது என்றார்.

ஆட்சியர் ஜெயகாந்தன் கூறும்போது, பெயர் இல்லாவிட்டால் மீண்டும் விண்ணப்பம் கொடுத்தால் உடனடியாக சேர்க்கப்படும். வெவ்வேறு பாகங்களில் மாறி இருந்தால் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »