Press "Enter" to skip to content

முதல்வருக்கு பார்க்கவகுல சங்கத்தினர் திடீர் பாராட்டு: திமுக கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சி

பாரிவேந்தரின் இந்திய ஐனநாயகக் கட்சி திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் பார்க்கவகுல சங்கத்தினர் முதல்வர் கேபழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக கூட்டணியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்கவகுல இனத்தவர் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருச்சி, லால்குடி, தேவகோட்டை, காளையார்கோவில், திருவாடானை உள்ளிட்ட ஊர்களில் அதிகம் வசிக்கின்றனர்.

அவர்கள் சங்கங்களை அமைத்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். அரசியல் அந்தஸ்து பெற, இந்திய ஜனநாயகக் கட்சியை 2010-ல் பாரிவேந்தர் ஆரம்பித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து பாஜகவுடன் இந்திய ஜனநாயகக் கட்சி இணக்கமாகவே இருந்து வந்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாரிவேந்தரின் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. பார்க்கவகுல மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் திமுகவும் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கியது. இந்நிலையில், சமீபத்தில் தேவகோட் டையில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்க திருவாடானை வட்டக் கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நீதிக் கட்சித் தலைவரும் பார்க்கவகுல சமூகத்தை சேர்ந்தவருமான ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருச்சியில் சிலை அமைக்கவும், மணிமண்டபம் கட்டவும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் திமுக கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்கத் தலைவர் கணேசன் கூறுகையில், பார்க்கவகுல சங்கம் வேறு, இந்திய ஜனநாயகக் கட்சி வேறு என்றார். இதனால் அச்சமூகத்தினர் ஆதரவு திமுக கூட்டணிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »