Press "Enter" to skip to content

ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஓ.பன்னீர்செல்வம் –  எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இரட்டை இலை வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் 4 விதமான கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்திடம் முன் வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும்,  இரண்டாவதாக டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 3வதாக இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும், நான்காவது குக்கர் சின்னத்தை இடைக்கால நிவாரணமாகத் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அவசரம் கருதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் மனுதாரர்கள் சார்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மார்ச் 15ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதன்படி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதேவேளையில், குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கை தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.