Press "Enter" to skip to content

தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்று, தமிழகத்துக்குள் நுழைந்து வடக்கு நோக்கி திரும்பிவிடுகிறது. அதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கிழக்கு திசைக் காற்று வலுவாக இல்லை. 7 டிகிரி வரை உயரும். எனவே அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் சுமார் 7 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட தகுந்த அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்:

தமிழகத்தில் 5 இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. தருமபுரி, மதுரை விமானநிலையம், நாமக்கல், சேலத்தில் தலா 100 டிகிரியும், திருச்சியில் 99 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »