Go to ...
RSS Feed

முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் சகோதரர் மர்ம மரணம்… ஆந்திராவில் பரபரப்பு


 

ALLOW NOTIFICATIONS
 

oi-Alagesan
|

கடப்பா: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்தா ரெட்டி இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கழிவறையில் இருந்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விவேகானந்தா ரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி, அதிகாலையில் விவேகானந்தா ரெட்டிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது, எந்த ஒரு பதிலும் இல்லாததால், காலை 5.30 மணிக்கு விவேகானந்தா ரெட்டி வீட்டிற்கு வந்த கிருஷ்ணா ரெட்டி, வீட்டில் உள்ள அறைகளில் சென்று தேடி உள்ளார். பின்னர்,கழிவறைக்கு சென்று பார்த்தபோது, முன்னந்தலையில் காயத்துடன் உயிர் அற்ற நிலையில் விவேகானந்தா ரெட்டி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போதே வெயில் தாங்க முடியல… இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதாம்

இதுகுறித்து, காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புலிவேண்டுலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு தாமதமாக இரவு வீடு திரும்பிய அவர், நீண்ட நேரமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், எப்போது அவர் கழிவறைக்குச் சென்றார். மார்படைப்பு எதுவும் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்று காவல் துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவேகானந்தா ரெட்டி மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, விவேகானந்தா ரெட்டி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia