Press "Enter" to skip to content

அதுஅந்தக்காலம்… இது ராத்திரி நேரம்

ஒரு காலத்தில் தேர்தல் என்றால் அது 24 மணி நேர கொண்டாட்டம். பகலில் மட்டுமல்ல இரவிலும் விடிய, விடிய  தலைவர்கள், வேட்பாளர்கள்  வாக்கு கேட்டு வலம் வருவார்கள். தங்கள் தலைவர்களின் பிரசாரத்தை கேட்க கட்சிக்காரர்கள் கொட்டும் பனியாக இருந்தாலும் சரி, கடும் புழுக்கமாக இருந்தாலும் சரி, தூக்கம் மறந்து காத்திருப்பார்கள்.
அவர்கள் வரும்வரை ஓலி பெருக்கிகள் அலறும், வண்ண விளக்குகள் ஒளிரும்…. எங்கும் ஆட்டம் பாட்டமுமாக இருக்கும். ‘இப்போது இரவில் மட்டுமல்ல பகலில் கூட தேர்தல் காலமா இது’ என்று சந்தேகமாக இருக்கிறது.

இந்த அமைதி ஆரம்பித்தது 1996ம் ஆண்டு தேர்தலில் தான். அப்போது இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பத்து மணி ஆனதும் பிரசாரத்தை முடிக்கச் சொல்லி காவல்துறையினர் கட்டளை போடுகின்றனர். அத்து மீறுபவர்கள் மீது வழக்குகள் மட்டும் பதியப்படுகின்றன.இரவு நேர பிரசாரத்தில் ஆரம்பித்த தடை மெல்ல சுவரொட்டி வைக்கத் தடை, தோரணங்கள் கட்டத் தடை, அரசு கட்டிடங்களில் விளம்பரம் செய்ய தடை, வெளிப்படையாக செலவு செய்யத் தடை, அதிக வாகனங்களில் செல்லத் தடை, வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடை என்று தொடர்ந்த தடைகளால் தேர்தலில் முகம் மாறிவிட்டது. புது பட வெளியீடு போல இருந்த தேர்தல் கொண்டாட்டம் இப்போது டிவியில் பார்க்கும் படம் போல் அறைக்குள் அடங்கிவிட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »