Press "Enter" to skip to content

தேர்தல் அதிகாரிகள் கடமையே தனி : கோயில் பகுதியிலும் ‘தாமரை’ அழிப்பு

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வரையப்பட்டிருந்த  தாமரை ஓவியங்களை, தேர்தல் ஆணையம் அழித்ததற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் முத்திரை சின்னமாகவும், வைணவ தலங்களில் மிகவும் முக்கியமானதாகவும் விளங்கக்கூடியது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.  தேர்தல் அதிகாரிகள் நேற்று கோயிலுக்கு வந்தனர். கோயிலின் நுழைவாயில் வளாகப்பகுதிகளில் வரையப்பட்டிருந்த தாமரை உள்ளிட்ட பூக்கள் ஓவியங்களை சுண்ணாம்பு கலவை கொண்டு அழித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்து அமைப்புகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும், கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், ‘‘கோயிலில் வந்து ஓவியத்தை அழிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்’’ என்றார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கூறுகையில், ‘‘புனித தலங்களின் பாரம்பரிய வழக்கங்களை மாற்ற தேவையில்லை.  ஆண்டாள் கோயிலின் வெளிப்பகுதியில் போடப்பட்ட கோலத்தில் சின்னங்கள்  இருப்பதாக காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். உடனே அழிக்கப்பட்ட இடத்தில், பக்தர்களே வேறு புதிய கோலம் போட்டுள்ளனர்’’ என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »