Go to ...
RSS Feed

ஹலோ இன்ஸ்பெக்டரா…..இதற்கு நீங்களே அனுமதி கொடுங்க! விழி பிதுங்கும் தேர்தல் அதிகாரிகள்


பொள்ளாச்சி பாலியல் புகார் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கேட்டு தேர்தல் அதிகாரிகளை நச்சரிப்பதால் விழி பிதுங்கி நிற்கின்றனர்.தேர்தல் அறிவிக்கும் முன்பாக ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தவும், மைக் செட் வைக்கவும் அந்தந்த காவல் துறை ஸ்ேடஷனில் அனுமதி வாங்கினால் போதுமானது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்துள்ள இடத்தில் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என நேரம் ஒதுக்கி அந்தந்த இன்ஸ்ெபக்டரே அனுமதி வழங்குவது வழக்கம். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு எந்த காவல் துறை ஸ்டேஷனிற்கு ஆர்ப்பாட்ட அனுமதி கேட்டுச் சென்றாலும் தேர்தல் நடத்தும் அலுவலர் தான் அனுமதி வழங்க வேண்டும் என திருப்பி விடுகின்றனர். காவல் துறை ஸ்டேஷனில் எந்த அனுமதியும் வழங்குவதில்லை.

இதனால் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.குறிப்பாக, பொள்ளாச்சி பாலியல் புகாரை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கான அனுமதி கோரி நாள் தோறும் 10க்கும் அதிகமான விண்ணப்பங்கள் உதவி தேர்தல் அலுவலர்களிடம் குவியத் தொடங்கியுள்ளது. இதனால் தேர்தல் பணியை கவனிப்பதா, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்குவதா என தேர்தல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக யாராவது ஆர்ப்பாட்டம், அனுமதி என்று வந்தாலே, அந்த காவல் நிலையம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, இந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம் எங்கள் பக்கம் திருப்பி விடாதீர்கள். இதற்கு நீங்களே அனுமதி கொடுங்கள்.தேர்தல் தொடர்பானதை மட்டும் எங்களுக்கு அனுப்புங்கள் எனக் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

Tags: