Press "Enter" to skip to content

மானாமதுரையில் ஜெயிக்காமல் தொகுதியை விட்டு வர மாட்டேன்: அமைச்சர் பாஸ்கரன் சபதம்

மானாமதுரை சட்டபேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்காமல் தொகுதியை விட்டு வெளியேற மாட்டேன் என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: மானாமதுரை தொகுதியில் 13 பேர் சீட் கேட்டுள்ளனர்.

இதில் யாருக்கு சீட் கிடைத்தாலும், மற்றவர்கள் சிறப்பாக தேர்தல் பணியை செய்ய வேண்டும். மானாமதுரையை எனது தொகுதி போல் நினைத்து வேலை செய்து வருகிறேன். அதேபோல் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். பூத் குழுயில் உள்ளவர்கள் தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற வைக்காமல் தொகுதியை விட்டு வெளியேற மாட்டேன் என்றார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »