Press "Enter" to skip to content

இந்தியாவில் மீண்டும் பாகிஸ்தான் சேர்ந்துவிடும்: ஆர்.எஸ்.எஸ்! …3 நிமிட வாசிப்பு2025ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இந்தியாவில் இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் தலை…

2025ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இந்தியாவில் இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 16) மும்பையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திரேஷ் குமார், “குறித்துவைத்து கொள்ளுங்கள், இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கராச்சியிலோ, லாகூரிலோ, ராவல்பிண்டியிலோ, சியால்கோட்டிலோ நீங்கள் வீடு வாங்கவும், தொழில் செய்யவும் முடியும். 1947ஆம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் என்று ஒரு நாடே இல்லை. 1945ஆம் ஆண்டுக்கு முன் இந்துஸ்தானின் ஒரு பகுதியாகத்தான் பாகிஸ்தான் இருந்ததாக சொல்கிறார்கள். 2025ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்துஸ்தானின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இருக்கும்.

காஷ்மீர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு ஒரு நல்ல முயற்சியை எடுத்துள்ளது. ஏனென்றால், அரசியல் மனவலிமையை ராணுவம் அதிகரிக்கிறது. தற்போது அரசியல் மனவலிமை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் செட்டில் ஆவதற்கான கனவுகள் நமக்கு இருக்கிறது. மேலும், மானசரோவருக்கு செல்வதற்கு சீனாவின் அனுமதி தேவையாக இருக்கக்கூடாது. வங்கதேசத்தில் நமது விருப்பப்படி ஒரு அரசு உருவாகியுள்ளதை உறுதி செய்துள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே அகண்ட பாரதத்தின் பாரதிய ஒன்றியம் விரைவில் உருவாகும்.

பாகிஸ்தானை கைப்பற்ற சீனா முயற்சித்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆயுதமே இல்லாமல் நாம் சீனாவை வெற்றிபெற்றுவிட்டதால் அந்நாடு பாகிஸ்தானை ஆதரிக்கிறது. தொக்லாமிலிருந்து நாம் சீனாவை வெளியேற்றிவிட்டோம். சீனாவை யாருமெ வென்றதில்லை என இவ்வுலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் வென்றுவிட்டோம். அதனால்தான் சீனா கோபத்தில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »