Go to ...
RSS Feed

திமுக – அதிமுக: 8 தொகுதிகளில் நேருக்கு நேர்!3 நிமிட வாசிப்புமக்களவைத் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை ஏற்கெனவே அறிவித்துவி…


மக்களவைத் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக அடங்கிய கூட்டணியும் அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகள் உள்ள நிலையில் இருகட்சிகளுமே கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் மட்டுமே அதிமுகவும், திமுகவும் போட்டியிடுகிறது.

ஜெயலலிதா மற்றும் கலைஞர் இல்லாத நிலையில் அதிமுகவும், திமுகவும் முதன்முறையாக தேர்தலை சந்திக்கின்றன. இருகட்சிகளுக்கும் புதிய தலைமை அமைந்திருப்பதால், தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இரு கட்சிகளும் உள்ளன. மார்ச் 14ஆம் தேதியே திமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியல் வெளியான நிலையில், அதிமுக கூட்டணியின் தொகுதிப்பட்டியல் இன்று வெளியானது. 20 தொகுதிகளில் போட்டியிடும் இருகட்சிகளும் 8 தொகுதிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதுகிறது. திமுகவுடன் நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியிருப்பது அதிமுக வட்டாரத்திலேயே சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக-அதிமுக நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகள்

சேலம்

வட சென்னை

பொள்ளாச்சி

திருவண்ணாமலை

நீலகிரி (தனி)

மயிலாடுதுறை

காஞ்சிபுரம் (தனி)

தென் சென்னை

திமுவுடன் மோதும் பாமக

20 தொகுதியில் போட்டியிடும் அதிமுகவே திமுகவுடன் 8 தொகுதிகளில் தான் நேருக்கு நேர் மோதுகிறது. ஆனால் 7 தொகுதிகளில் போட்டியிடும் பாமக 6 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. விழுப்புரத்தில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டாலும், அவரும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். அதனால் 7 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தை எதிர்த்தே பாமக போட்டியிடுகிறது.

திமுக-பாமக மோதும் தொகுதிகள்

தர்மபுரி

விழுப்புரம் (தனி) (விசிக ரவிக்குமார்-உதயசூரியன்)

அரக்கோணம்

கடலூர்

மத்திய சென்னை

திண்டுக்கல்

ஸ்ரீபெரும்புதூர்

Source: Minambalam.com