Go to ...
RSS Feed

வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு


தூத்துக்குடி: மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடியில் மாணவர்கள் பங்கேற்ற ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதில் 100 சதவீத விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

எனவே தூத்துக்குடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ரோஜா பூங்காவில் கோலப்போட்டி, ஸ்கேட்டிங், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டது  குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Tags: