Press "Enter" to skip to content

பணமூட்டையுடன் சென்று வெற்றி பெறலாம் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை நிறுத்தலாமே? – டிடிவி தினகரன்

2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் கூட தான் நிற்க வாய்ப்பு உண்டு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  மேலும் வரும் 22ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம் என்றார் டிடிவி தினகரன்.

ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:

அதிமுக கூட்டணி அது அமைந்த அன்றே தோல்வியடையும் கூட்டணி என்று தெரிகிறது. அதனால் அதைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.  தேர்தல் முடிவுகள் குறித்து வல்லுநர்கள், மேதாவிகளெல்லாம் என்னென்னவோ கூறுகின்றனர், அவர்கள் கூறுவதெல்லாம் பொய் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

தேனி தொகுதியில் நானே கூட நிற்கலாம், எல்லோரும் என்னை நிற்கவேண்டும் என்று கூறிவருகிறார்கள். என்னுடைய சொந்தத் தொகுதி மாதிரி அது, அதனால் நான் கூட அங்கு நிற்கலாமே.

பணமூட்டையுடன் சென்று வெற்றி பெறலாம் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை நிறுத்தலாமே? கூட்டணிக்காக கட்சிகளை அதிமுக தேடிச்சென்றது இது தான் முதன்முறை. கூட்டணி அமைக்கப்பட்ட அன்றே தோற்கடிக்கப்பட்ட கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி. தொண்டர்கள் விருப்பப்பட்டால் தேனி மக்களவை தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன்.

தென் மண்டலம் மட்டுமின்றி அனைத்து மண்டலங்களிலும் ஆதரவு உள்ளது.  3 மாதமாக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஓசூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் 27-ம் தேதி தொடங்குவேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »