Go to ...
RSS Feed

‘பாவம் உங்கிட்ட வேற காசு இல்லையா?’.. திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த நல்ல திருடன்!


 

ALLOW NOTIFICATIONS
 

lekhaka-Jaya chitra
|

பீஜியிங்: சீனாவில் திருடன் ஒருவன், தான் திருடிய பணத்தை சம்மந்தப்பட்ட பெண்ணிடம் திருப்பிக்கொடுத்த அதிசயமான சம்பவம் நடந்துள்ளது.

சீனாவை சேர்ந்த லி என்ற பெண் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க பண இயந்திரம் சென்றார். அவர் பணத்தை எடுத்து முடித்ததும், பண இயந்திரம்க்குள் நுழைந்த திருடன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி, லியிடம் இருந்த பணத்தை பிடிங்கிக்கொண்டான்.

பிறகு அந்த திருடன் என்ன நினைத்தானோ என்னவோ தெரியவில்லை. லியின் வங்கி கணக்கில் எவ்வளவு மீதித்தொகை இருந்தது என்பதை காண்பிக்க கூறினான். அவரும் தனது அக்கவுண்ட் பேலன்சை காட்டினார்.

லியின் வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லை. இதனால் மனம் மாறிய திருடன், தான் பறித்த பணத்தை லியிடமே மீண்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். இவ்வளவு நியாமான திருடனா என லி ஆச்சரியப்பட்டார்.

ஆனால் பண இயந்திரத்தில் இருந்த கண்காணிப்பு தொலைக்காட்சி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அந்த திருடனை காவல் துறையினர் கைது செய்தனர். அந்த திருடன் மீது, கத்தியை காட்டி பணத்தை பறித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia