Go to ...
RSS Feed

சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள்


 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி- மீஞ்சூர் இடையை சிக்னல் கோளாறு காரணமாக சென்னை கும்முடிபூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக  இயக்கப்பட்டன. மேலும் கும்முடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் பொன்னேர- மீஞ்சூர் இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை செல்லும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் தொடர்வண்டித் துறை ஊழியர்கள் சிக்னல் கோளாறுகளை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.எனவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Source: Dinakaran

Tags: