Press "Enter" to skip to content

இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது திமுக!3 நிமிட வாசிப்புமக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படும் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டி…

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படும் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது. திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார்.

18 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து முக.ஸ்டாலின் பேசுகையில், “18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதால் இது சின்ன (மினி) சட்ட மன்றத் தேர்தல்தான். டெல்லியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஆட்சிமாற்றம் நடக்கப்போகிறது. நியாயப்படி பார்த்தால் 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு 3 தொகுதிகளுக்கு நடத்த மறுக்கிறார்கள். இதுதொடர்பாக சட்ட ரீதியாகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

18 சட்ட மன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்

பூந்தமல்லி (தனித் தொகுதி)- அ.கிருஷ்ணசாமி

பெரம்பூர்- ஆர்.டி.சேகர்

திருப்போரூர்- செந்தில்

சோழிங்கர்- அசோகன்

குடியாத்தம் (தனித் தொகுதி)- காத்தவராயன்

ஆம்பூர்- வில்வநாதன்

ஒசூர்- சத்யா

பாப்பிரெட்டிப்பட்டி- மணி

அரூர் (தனித் தொகுதி)- கிருஷ்ணகுமார்

நிலக்கோட்டை (தனித் தொகுதி)- சவுந்திரபாண்டியன்

திருவாரூர்- பூண்டி கலைவாணன்

தஞ்சாவூர்- டி.கே.ஜி.நீலமேகம்

மானாமதுரை (தனித் தொகுதி)- கரூர் காசிலிங்கம்

ஆண்டிப்பட்டி- மகாராஜன்

பெரியகுளம் (தனித் தொகுதி)- கே.எஸ்.சரவணகுமார்

சாத்தூர்- ஸ்ரீநிவாசன்

பரமக்குடி (தனித்தொகுதி)- சம்பத் குமார்

விளாத்திகுளம்- ஏ.சி.ஜெயக்குமார்

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சவாடி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வெங்கடேசன் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிற 20 பேரில் மருத்துவர்கள் 3 பேர், வழக்கறிஞர்கள் 5 பேர், பொறியாளர் ஒருவர், பட்டதாரிகள் 9 பேர். மகளிர் 2 பேர். 18 சட்ட மன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரையில் திமுக நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் வழக்கறிஞர்கள் 4 பேர், பொறியாளர்கள் 2 பேர், பட்டதாரிகள் 5 பேர்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »