Press "Enter" to skip to content

உத்திரமேரூரில் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து பார வண்டி (லாரி) ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் திரும்பப்பெற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு கலைக் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பார வண்டி (லாரி) ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் திரும்பப்பெற வாங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 20 மாநிலங்களில் கடந்த ஏப்.,11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்திரமேரூர் அரசு கலைக் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 22 பார வண்டி (லாரி)களின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3 நாட்களாக தேர்தல் அதிகாரிகள் உணவுக்கு கூட பணம் தரவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், நாளை தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உத்திரமேரூர் தொகுதியில் இருப்பதால் இன்று மாலை 6 மணிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் பார வண்டி (லாரி) ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. தகவலறிந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பார வண்டி (லாரி) ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 3 நாட்களுக்கான உணவுத்தொகை ரூ.20,560 விநியோகம் செய்யப்பட்டதால் போராட்டத்தை திரும்பப் பெற்ற ஓட்டுநர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »