Press "Enter" to skip to content

வாக்குச்சாவடி அருகே யானை நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்

வால்பாறை:  வால்பாறையில் வாக்குச் சாவடிகள் அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேயிலை தோட்ட பகுதிகளாக குரங்குமுடி, பன்னிமேடு, முருகன் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார வசதி அடிக்கடி துண்டிக்கப்படுவதால் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடும் அபாயம் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »