Press "Enter" to skip to content

பெற்றோர் எதிர்ப்பால் விபரீதம் திருமணம் ஆன சில நிமிடங்களில் தொடர் வண்டியில் பாய்ந்து உயிரிழந்த காதல் ஜோடி

திருப்பதி : சித்தூர் மாவட்டம், சந்திரகிரி அடுத்த மோரவாரிபல்லியை சேர்ந்தவர் தனஞ்ஜெயன்(23), ஜேசிபி டிரைவர். ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்தவர் பல்லவி(17), இன்டர்மீடியட் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் கடந்த ஓராண்டாக காதலித்துள்ளனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 12ம்தேதி வீட்டில் இருந்த பல்லவி திடீரென மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்திரகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்லவியை தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரகிரி தொடர் வண்டிநிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் ஆண், பெண் சடலம் இருப்பதாக தொடர்வண்டித் துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சந்திரகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர்கள் மாயமான பல்லவி, தனஞ்ஜெயன் என்பதும், இருவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த கைபேசியை ஆய்வு செய்தபோது இருவரும் பேசிய செல்பி காணொளி இருந்தது. அதில், தங்களுக்கு திருமணமாகி விட்டதாகவும், தங்களது காதலை பெற்றோர் பிரிக்க முயல்வதால் இனி உயிர் வாழ முடியாது என்பதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சந்திரகிரி தொடர்வண்டித் துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தம்பதி தொடர் வண்டிமுன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும், அதற்கு முன்னதாக உருக்கமான செல்பி காணொளி பதிவு செய்தது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.