Press "Enter" to skip to content

மிகுதியாக பகிரப்பட்ட ராகுல் காந்தி காணொளி: பியூஷ் கோயல் கிண்டல் – குஷ்பு பதிலடி

மிகுதியாக பகிரப்பட்ட ராகுல் காந்தி காணொளி தொடர்பான பியூஷ் கோயல் கிண்டலுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதி தவிர்த்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக 2 நாட்கள் பயனமாக வயநாட்டுக்கு ராகுல் காந்தி வந்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற ராகுல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி தான் இன்று சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. அதில் ராகுல் காந்தியின் பேச்சை பி.ஜெ.குரியன் மொழிபெயர்க்க தெரியாமல், தடுமாறுவது போல அந்த காணொளி அமைந்திருந்தது. மேலும், இடைஇடையே ராகுல் காந்தி தான் என்ன சொன்னேன் என்பதை மைக்கை விட்டு அவருடைய காதில் மறுபடியும் சொன்னார். பிறகு அதனை மொழிபெயர்த்தார்.

இந்த காணொளிவை பகிர்ந்து எதிர்க்கட்சியினர் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். இந்த காணொளிவை மத்திய பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தியின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல, மொழிமாற்றம் செய்வதும் கடினம். இந்த பொன்னான காணொளிவைப் பார்த்து அதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் உட்பட அனைத்து பாஜக தலைவர்களும், எப்படி எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நீங்களாக இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த நபரின் கனவையும், லட்சியத்தையும் வாக்கு மொத்தமக நசுக்கியிருப்பீர்கள். உங்கள் மேல் பயம் படர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.