Press "Enter" to skip to content

‘வேலைக்கு போகாதே’ என கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை: திருச்சி அருகே சோகம்

தா.பேட்டை: திருச்சி அருகே கணவர்  தகராறு செய்ததால்  விரக்தியடைந்த மனைவி தனது 2 குழந்தைகளை எரித்து கொன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள ஊருடையாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகராணி (28). இவர்களுக்கு  குணா (8), சந்தோஷ் (6) என்ற 2 மகன்கள் இருந்தனர். பன்னீர்செல்வம் கூலி தொழிலாளி என்பதால், அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நாகராணி வேலைக்கு சென்றார். இது  பன்னீர்செல்வத்துக்கு பிடிக்கவில்லை. ‘நீ வேலைக்கு போக வேண்டாம்’ என்று கண்டித்துள்ளார். இதை நாகராணி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம்  மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், பன்னீர்செல்வம் ஓட்டுப்போட சென்று விட்டார். அப்போது, விரக்தியில் இருந்த நாகராணி, வீட்டில் இருந்த  மண்ணெண்ணெயை எடுத்து தன் இரு குழந்தைகளின் தலையிலும் ஊற்றி, தன் தலையிலும் ஊற்றிக்கொண்டார். பின்னர், குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு, தனக்கும் தீ  வைத்துக்கொண்டார். 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர், அவர்களை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணா இறந்தான். மேல்சிகிச்சைக்காக இருவரையும் சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் இறந்தனர். இதுகுறித்து தா.பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.