Press "Enter" to skip to content

தாராபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெயில்  நிலவி வந்தது.   இந்நிலையில் நேற்று  மாலை 4 மணி அளவில் சூறைக்காற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய  துவங்கியது ,சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக தாராபுரம் நகரம்  முழுவதும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக நகரின்  மையப்பகுதியில் இருந்த மாரியம்மன் கோவில் பஜனை மடத்தின் மீதிருந்த  கோபுரத்தில் இடி விழுந்தது. இதில் கோபுரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து சேதமானது.  

இதேபோல் அருகே உள்ள அகமுடையர் தெருவில் இருந்த பழமையான  விநாயகர் கோயில்  அரசமரம் சூறைக்காற்றினால் பாதியாக முறிந்து விழுந்தது.  இரண்டு மாதத்துக்கு பின் பெய்த திடீர் மழை  சூறைக்காற்றால் ஒரே நாளில் கோயிலின் கோபுரமும், விநாயகர் கோவிலின் பழமையான  தல விருட்சமும் சேதமானது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழை மரங்கள் சேதம்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலையில் நேற்றுமுன்தினம் சூறாவளி காற்றுடன் அடைமழை (கனமழை) கொட்டித்தீர்த்தது. இதனால் குன்னத்தூர், அரசு வட்டம் ஆகிய பகுதிகளில்  சுமார் 1,200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »