Press "Enter" to skip to content

இன்று ஈஸ்டர் பண்டிகை ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர்,முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நன்னாளில் அன்பு, இரக்கம், அறநெறியை கடைபிடித்து மனித குலத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.

முதல்வர் பழனிசாமி:

பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், அப்படி செய்வதனால் நீங்கள்பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குபுத்திரராயிருப்பீர்கள் என்றுரைத்தகர்த்தராகிய இயேசு உயர்த்தெழுந்த இந்தப் புனித நாளில் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும். கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

அன்பு, கருணை, மனிதநேயம் போன்றவற்றின் அடையாளமாக திகழும் இயேசுபெருமானின் உயிர்த்தெழுந்த இந்த நாள் கிறிஸ்துவ மக்களின்இனிய நாள்.

எப்போதும்கிறிஸ்துவ மக்களுக்காக திமுகதொடர்ந்து பாடுப்பட்டு வருகிறதுஎன்பதை நினைவூட்டி ஈஸ்டர்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

நாட்டின் மத, இன, மொழி வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதியோடு வாழஇயேசுவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழக மக்களிடையே ஒற்றுமை,சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அதற்காக இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நாளில் அனைத்து தரப்பினரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் கவலையோடும், துன்பத்தோடும் அழிவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்ற மக்களுக்கு இந்த நாள் நம்பிக்கை ஊட்டுகின்றது. அச்சத்தை தள்ளி, எழுச்சியின் உச்சத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்:

அன்பை விதைத்து அன்பையே அறுவடைசெய்வோம். எல்லா முனைகளிலும் வெறுப்பை அகற்றுவோம். பன்முகத்தன்மை கொண்டிருக்கிற இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழல் உருவாகட்டும். ஈஸ்டர் திருநாள் அதற்கு வழி காணட்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி:

உலகில் அமைதி,வளம், நல்லிணக்கம், எதிரிக்கும் உதவும் குணம், சகோதரத்துவம், சகிப்புத் தன்மை ஆகியவற்றை பெருக்க இயேசுவின் போதனைகளை பெருக்க உறுதியேற்போம்.

சமக தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர்மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.