Press "Enter" to skip to content

பம்மலில் இறைச்சி வியாபாரி கொலை: 7 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

image

பல்லாவரம் அருகே பம்மலில் இறைச்சி வியாபாரியை அடித்துக் கொலை செய்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பல்லாவரத்தை அடுத்த பம்மல், நாகல்கேணி, ஆதம் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் நாகல்கேணியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பன்றி இறைச்சி மற் றும் பகோடா கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், குரோம் பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபன் ஆகியோரை சீனிவாசன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்களதுநண்பர்களை அழைத்து வந்துள்ளனர். பின்னர் கும்பலாகச் சேர்ந்து சீனிவாசனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சீனிவாசன், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கர் நகர் காவல் துறையினர் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிந்து விஜய்(24) பார்த்திபன்(24) விஜய் (ஆதம் நகர்) (24) ஆனந்த் (24), டில்லிபாபு(24) கண்ணன்(24), சூர்யா(24) 7 பேரைக் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கரண் என்பவரைத் தேடி வருகின்றனர்.

இறைச்சி வியாபாரம் செய்வதில் சீனிவாசனுக்கும் கொலையாளிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் கொலை நடந்துள்ளதாகவும் காவல் துறை விசாரணையில்தெரியவந்தது. இறந்த சீனிவாசனுக்கு லட்சுமி என்ற மனைவி யும் மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »