Press "Enter" to skip to content

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குறிப்பிட்ட கட்சி சின்னம் வரையப்பட்ட 2 வீடுகள் மீது கல்லெண்ணெய் (பெட்ரோல்) குண்டு வீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குறிப்பிட்ட கட்சி சின்னம் வரையப்பட்ட 2 வீடுகள் மீது கல்லெண்ணெய் (பெட்ரோல்) குண்டு வீசிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். நெல்லிக்குப்பம் அருகே எய்தனூர் கிராமத்தில் இன்று அதிகாலையில் மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சென்ற படி இரு வீடுகள் மீது கல்லெண்ணெய் (பெட்ரோல்) குண்டுகளை வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ, சேதமோ ஏற்படவில்லை.

அந்த இரு வீடுகளிலும் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னம் வரையப்பட்டு இருந்தது. கல்லெண்ணெய் (பெட்ரோல்) குண்டு வீசப்பட்டதன் காரணமாக கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.