Press "Enter" to skip to content

கோடை விடுமுறையை கொண்டாட ‘தென்னகத்து காஷ்மீரில்’ திரண்ட சுற்றுலா பயணிகள்

மூணாறு: மூணாறில் விடுமுறை தினத்தை முன்னிட்டு மாட்டுப்பட்டி பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.‘தென்னகத்து காஷ்மீர்’ என்று அழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிகின்றனர்.

மூணாறின் முக்கிய சுற்றுலாத்தலமாக கருதப்படும் மாட்டுப்பட்டி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அத்துடன் முதன்மையான நிலையம், குண்டலை அணை, எக்கோ பாயின்ட் போன்ற பகுதிகளை கண்டு ரசித்த பயணிகள், மாட்டுப்பட்டி அணையில் படகில் உற்சாகமாக சவாரி ேமற்கொள்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் மூணாறில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »