Press "Enter" to skip to content

வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – வயநாட்டிலும் ராகுல் காந்தி வேட்புமனுவுக்கு எதிராக புகார்

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ராகுல் காந்தியின் வேட்புமனுவை சீராய்வு செய்ய வேண்டுமென வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் தே.ஜ.கூ வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். #Rahulnomination #Rahulnominationreview

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் மீது அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி நாளை (22-ம் தேதி) விசாரணை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், இதே விவகாரத்தை சுட்டிக்காட்டி வயநாடு தொகுதியில்  ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி இன்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது வழக்கறிஞர் மூலம் வயநாடு தொகுதி தேர்தல் அலுவலருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ராகுல் காந்தி இதுபற்றி தனது வேட்புமனுவிலோ, பிரமாணப் பத்திரத்திலோ எங்கும் குறிப்பிடவில்லை.

image

எனவே, அவரது வேட்புமனு ஏற்கப்படலாமா, அல்லது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா? என்பது தொடர்பாக சீராய்வு செய்து முடிவெடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WayanadNDAcandidate #TVellappally #Rahulnomination  #Rahulnominationreview #ECtoreview #LSpolls2019

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »