Press "Enter" to skip to content

ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசு அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை: உயர்நீதிநீதி மன்றம் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல  மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிடுவன: ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மத்திய அரசின் சார்பாக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த திட்டம் முற்றிலும் இயற்கை வளங்களை அளிக்கக்கூடியதாகவும் மேலும் சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் அமைவதாகவும் தெரிவித்திருந்தார் எனவே இந்த மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று அவசர கால விடுமுறை நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த குழாய் பதிப்பதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வாதமிடப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் முற்றிலும் இது விவசாய நிலங்களுக்கு எதிரான ஒரு செயல்பாடு என குறிப்பிடப்பட்டது.

மத்திய அரசின் சுற்றுசூழல் துறை மற்றும் வன பாதுகாப்பு துறையில் இந்த எரிவாயு குழாய் பதிப்பதற்கான எந்த அனுமதியும் இல்லை. முறையான அனுமதி இல்லாமல் நிறுவனங்களுக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக மத்திய அரசு செயல்படுகிறது. எனவே இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதமிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் முறையான அனுமதி பெறாமல் எவ்வாறு சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எண்ணெய் குழாய் பதிக்கப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் அதுவரை இந்த திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை  விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.