Press "Enter" to skip to content

கடலூர் அருகே பனை ஓலை விசிறி தயாரிப்பு தீவிரம்

கடலூர்: கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க இயற்கை கொடுத்த வரப்பிரசாதமான பனைஓலை விசிறி தயாரிப்பு பணி கடலூர் அருகே தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் அடுத்த அன்னவெளி கிராமத்தில் பனை ஓலை விசிறிகளை தயாரிப்பதையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். 40 க்கு மேற்பட்ட வீடுகளில் குடும்பம் குடும்பமாக ஒன்றுசேர்ந்து பனை ஓலை  விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தற்போது அக்னி நட்சத் திரம் தொடங்கி  உள்ள  நிலையில் விசிறி தயாரிக்கும் பணி தீவிர மடைந்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல்  ஜூன் வரை 4 மாதங்கள் விசிறி தயாரிப்புப் பணி நடக்கும். அருகமலையில் உள்ள ஆறு ஏரிகள் மற்றும்  காட்டுப் பகுதிகளில் வளர்ந்துள்ள இளம் பனை மரங்களிலிருந்து பனை ஓலைகளை வெட்டி எடுத்து வந்து, காய வைப்பம்.

காய வைக்கப்பட்ட பனை ஓலைகளை, தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு, விசிறி வடிவத்துக்கு கத்தியால் நறுக்குவோம். அவ்வாறு நறுக்கப்பட்ட பனை ஓலை  வடிவமைத்த பின்னர்  தயார் செய்த பனை ஓலை விசிறிக்கு பச்சை, சிவப்பு ஆகிய  ஏதேனும் ஒரு நிற சாயம் போடுவோம். தொடர்ந்து, ஈச்சம் செடியிலிருந்து சேகரிக்கப்பட்ட குச்சி, பனை ஓலை குருத்து, பனை நாறு ஆகியவை விசிறி முழுமைபெற  வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இறுதியாக அந்த பனை ஓலை விசிறியாக உருமாறும் என இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தனர். என்றனர்.

 கடந்த காலங்களில் அன்னவெளி கிராமத்தில் சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் விசிறி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வெறும் 40 குடும்பங்கள் தான் விசிறி தயாரிக்கும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். பனை மரங்கள் குறைந்து வருவதே தொழில் நலிவடைய காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். அனல் காற்றின் உஷ்ணத்தை விரட்டவும் குளிர்ச்சியான காற்று வழங்கிடவும் மலிவான விலையில் மருத்துவ குணங்களும் நிறைந்த பயன் தரும் விதத்தில் அமைந்துள்ளது பனைஓலை விசிறி என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

Source: Dinakaran