காவல் துறையினர் பொய் வழக்கு போட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு காணொளி வெளியிட்டு திமுக பிரமுகர் தற்கொலை: சேலம் அருகே பரபரப்பு

காவல் துறையினர் பொய் வழக்கு போட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு காணொளி வெளியிட்டு திமுக பிரமுகர் தற்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ஆத்தூர்: சேலத்தை  அடுத்த ஆத்தூரில் போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதால் மனமுடைந்ததாக கூறி,  காணொளி வெளியிட்டு திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம்  ேநதாஜி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (50). திமுக பிரமுகரான இவர் அந்த  பகுதியில் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை,  வீட்டிலிருந்த பிரேம்குமார், வாயில் நுரை  தள்ளிய நிலையில் திடீரென மயங்கி  விழுந்தார். திடுக்கிட்ட உறவினர்கள் அவரை மீட்டு, ஆத்தூர் தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று  காலை, பிரேம்குமார்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே பிரேம்குமார் தற்கொலை செய்து  கொண்டது ஏன்? என்பதற்கான காரணத்தை விளக்கி, தனது செல்போனில் காணொளி ஒன்றை  பதிவு செய்துள்ளார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த  காணொளியில் பிரேம்குமார் பேசி இருப்பதாவது,பிரேம்குமார் என்ற நான், ஆத்தூர் ேநதாஜி நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறேன். அதில் பணம் பெற்றுக்கொண்டு, என்னை பலபேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் குட்டி என்ற ராஜ்குமார், நான் சொல்லாததும் ஜாதியை  பற்றி பேசாததையும் திரித்து எனது பெயரிலும், எனது தம்பி செந்தில்குமார் பெயரிலும் ஆத்தூர் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஆத்தூர் டிஎஸ்பி, ஆய்வாளர் கேசவன் மற்றும் சரவணன், குட்டிஎன்ற  ராஜ்குமாருடன் சேர்ந்து எங்கள் மீது பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். என்மீதும், தம்பி மீதும் பிசிஆர் வழக்கில் எப்ஐஆர் போட்டுவிட்டனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு நான் ஆளாகி இருக்கிறேன். கவர்மென்ட் பதிவு பெற்ற  எனது பைனான்சில் இருந்து குட்டி என்ற ராஜ்குமார், 2 கணக்குகளாக  1லட்சத்து 8ஆயிரம் வாங்கினார். அதில் ஒரு கணக்கை மட்டும் காட்டியுள்ளார். அதிலும் ₹12ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு, ₹30ஆயிரம் கொடுத்தேன் என்று பொய்  சொல்கிறார். 2வது கணக்கில் மனைவி, மாமியாருடன் சேர்ந்து வாங்கிய ₹75ஆயிரத்தை வாங்கவேயில்லை என்று கூறியுள்ளார். இதையெல்லாம் காவல் துறையினர் ஏற்காமல், ஜாதி ெபயரை சொல்லி திட்டியதாக எங்கள் மீது பொய் வழக்கு  போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் கொடுத்த பணத்தை கேட்கமாட்டேன் என்று சொல்லச் சொல்லியும் மிரட்டுகின்றனர்.

மறுத்தால் எப்ஐஆர் ேபாட்டு உள்ளே தள்ளுவேன் என்றும் கூறிவிட்டனர். எனது மரணத்திற்கு முழுக்காரணம் ஆத்தூர் காவல்துறை தான். எனவே மரணத்திற்கு அவர்களே பொறுப்பு. இதையே மரணவாக்குமூலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய மகன் நன்றாக படித்து நல்லவேலைக்கு சென்று குடும்பத்தை  காப்பாற்ற வேண்டும். சின்னமகன் லாயருக்கு படித்து என்னை ேபால், பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதாடி பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் வெளியிட்டுள்ள  காணொளியில் ராஜ்குமாரின் பின்னணி குறித்தும், பல்வேறு கட்சி நிர்வாகிகள்  தன்னிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றியதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  எனவே அவர்களிடம் காவல் துறையினர் விசாரிக்க முடிவு  செய்துள்ளனர். இது அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தற்கொலை செய்து  ெகாண்ட பிரேம்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.  இவரது தம்பி செந்தில்குமார்,  ஆத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் என்பது  குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே சேலம் மாவட்ட எஸ்.பி.தீபாகனிக்கர் நேற்று ஆத்தூர் சென்று, பிரேம்குமார் குடும்பத்தினரிடம் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் கொடுத்த மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம்.  எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது இது குறித்து விசாரிக்கப்படும் என்று எஸ்.பி.உறுதியளித்தார்.

Source: Dinakaran

Author Image
murugan