Press "Enter" to skip to content

கொள்ளை போன மரகத லிங்கம் குப்பைமேட்டில் கண்டெடுப்பு

வேட்டவலம்: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிலில் இருந்த பலகோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ல் திருடு போனது. இந்நிலையில், நேற்று காலை ஜமீன் ஊழியர் பச்சையப்பன் ஜமீன் வளாக குப்பை மேட்டில் இருந்த குப்பைக்குள் மரகத லிங்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை மறைத்து வைத்துள்ளார். தகவலிந்த வேட்டவலம் காவல் துறையினர் பச்சையப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தொட்டியில் வைத்திருந்த மரகத லிங்கத்தை போலீசிடம் ஒப்படைத்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »