Press "Enter" to skip to content

56 இன்ஞ் மார்புக்குள் இருக்கும் இதயத்தை எங்கே?: மோடிக்கு பிரியங்கா கேள்வி

அச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என பெருமையாக கூறிய மோடியிடம், இதயத்தை எங்கே என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

அச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என்றும், தாம் அவ்வாறு கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பெருமையாக கூறி பிரசாரம் செய்தார். ‘56 இன்ஞ் மார்பு’ பிரசாரம் அப்போது மிகப்பெரியதாக பேசப்பட்டது.

இந்நிலையில் 56 இன்ஞ் மார்புக்குள் இருக்கும், இதயத்தை எங்கே என்று பிரியங்கா பிரதமர் மோடிக்கு கேள்வில் எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று மகராஜ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியின்போது பிரியங்கா பேசுகையில் ‘‘என்னிடம் 56 இன்ஞ் மார்பு உள்ளது என்று பெருமையாக கூறுனீர்கள். அதற்குள் இருக்கும் இதயத்தை எங்கே என்று அவரிடம் நான் கேட்கிறேன்.

தேசப்பற்று பற்றி பேசும்போதெல்லாம் மோடி பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பததெல்லாம் பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான் என்று நினைக்கிறார். அவருக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை தேசப்பற்று கிடையாது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியை உலகின் எந்த பக்கத்திலும் பார்த்திருக்கலாம். ஆனால், சொந்த நாட்டின் விவசாயிகளை சந்திப்பது குறுத்து ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது.

கிஷன் சம்மான் ஸ்கீம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பா.ஜனதா கூறுகிறது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருநாளைக்கு தலா மூன்று ரூபாய்தான் கிடைக்கும். இதனால் அவர்கள் விவசாயிகளை அவமானம் படுத்துகிறார்கள். கடந்த ஐந்து ஆண்களில் ஐந்து வேலைவாய்ப்புகைளை அழித்துள்ளனர். பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar