Press "Enter" to skip to content

வாக்களித்ததை பேஸ்புக்கில் வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு

போடி: தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட போடி நகர் பகுதியிலுள்ள வாக்குச்சாவடி எண் 55ல், தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜெமிமா பிளாரன்ஸ் போர்ஜியா (49). இவர் வாக்குப்பதிவு நேரத்தில் பணியிலிருந்த நேரத்தில் போடியை சேர்ந்த அழகர்சாமி (47), வாக்களித்து விட்டு வாக்களிக்கும் இயந்திரம் அருகில் நின்று செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

இதை கண்ட வாக்குச்சாவடி அதிகாரி கண்டித்தார். ஒரு அவசர அழைப்பு வந்ததால் பேசினேன் என்று அழகர்சாமி ஒருமையில் பேசி தகராறு செய்தார். பின்னர் அவர் வாக்களித்ததை பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தில் காணொளியாக பதிவிட்டுள்ளார். இதை கண்ட தேர்தல் அதிகாரி ஜெமிமா பிளாரன்ஸ் புகாரின்படி போடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »