Press "Enter" to skip to content

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ஓபிஎஸ் மகன் எம்.பி. என பொறிக்கப்பட்ட கல்வெட்டு : எதிர்க்கட்சியினர் கண்டனம்

தேனி : தேனி மாவட்டம் குச்சனூர் சனிஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் ஓபிஎஸ் மகனின் பெயர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் என்று பொரிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல்கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செலவனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமன்னூர் அருகே அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வர பெருமாள் திருக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. இதனையொட்டி இங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டில் கோயிலுக்கு உபயம் அளித்தவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனின் பெயர்கள் குடிப்பிடப்பட்டிருந்தது. அதில் யாரும் எதிர்பாராத விதமாக, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் என்று பொரிக்கப்பட்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளளது. வாக்கு எண்ணிக்கையே நடைபெறாத நிலையில், ரவீர்ந்திரநாத் குமாரை எப்படி தேனி எம்.பி. என கல்வெட்டில் எழுதலாம் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேனியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த போதும் மீண்டும் 2 மையங்களில் மறு வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டது. 2 மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவுக்காக கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 70 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையாக கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளர். மேலும் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று பொறிக்கப்பட்டுள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என அமமுக உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதனிடேயே கல்வெட்டில் எம்.பி. என பொறிக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது அவர் பெயர் கல்வெட்டில் மறைக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.