Press "Enter" to skip to content

எம்.பி. சர்ச்சை : கல்வெட்டில் இருந்த ஓ.பி.எஸ். மகன் பெயர் மறைப்பு

தேனி: கல்வெட்டில் எம்.பி. என பெயர் இருந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மறைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த கல்வெட்டில் மற்றொரு கல்வெட்டு வைக்கப்பட்டு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை உறுப்பினர் கல்வெட்டில் பெயர் பொறிக்க்பட்டிருந்தது. குச்சனூர் கோயில் நிர்வாகத்தினர் வைத்த கல்வெட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.