Press "Enter" to skip to content

கொளுத்துது கத்தரி வெயில் நெல்லையில் மண்பாண்டங்கள் விற்பனை ‘ஜோர்’

*நல்லி வைத்து ரூ.300க்கு விற்பனை

நெல்லை :  கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ளதால் நெல்லையில் மண்பாண்டங்கள் விற்பனை ‘களை’ கட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதமாக கோடை வெயில் தமிழகத்தை ஆட்டிப்படைகிறது. தற்போது அக்னி நட்சத்திர கத்தரி வெயில் தாக்கம் உச்சமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெப்ப பதிவு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வெயில் கொடுமையை தாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள், பழங்கள், இளநீர் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த வரிசையில் தற்போது மண்பாண்டங்கள் விற்பனையும் ஜோராக நடக்கிறது. நெல்லையில் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திடீரென முளைத்துள்ளன. நெல்லை சட்டக்கல்லூரி எதிரே உள்ள மண்பாண்ட பொருட்கள் விற்பனை கடையில் டெரகோட்டாவில் செய்யப்பட்ட நவீன மண் பாட்டில்கள் மற்றும் நல்லியுடன் கூடிய மண் பாண்டங்கள், ஜாடி, டம்ளர், டீ கப் போன்றவை இடம் பெற்றுள்ளன. நல்லி வைத்த மண் பாண்டம் ரூ.300க்கும், மண் பாட்டில் ரூ.150 முதல், ரூ.250க்கும், டீ கப் ரூ.10க்கும் விற்கப்படுகின்றன.

இவற்றை ஏராளமானவர்கள் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக பிரிட்ஜ் வசதி இல்லாத ஏழைகள் மட்டுமின்றி  வசதி படைத்தவர்களும் மண்பானை குடிநீர் பருக ஆர்வம்
காட்டுகின்றனர்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »