Press "Enter" to skip to content

வால்பாறை பகுதியில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

வால்பாறை : வால்பாறை பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் குறுகிய பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்தது வருகிறது. வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த மழையால்  வால்பாறை, பொள்ளாச்சி சாலையில் பல இடங்களில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு துண்டிப்பானது. பின் இந்த சாலைகளில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் சரி செய்து வந்தனர்.

இந்நிலையில் ரொட்டிக்கடை பழைய வால்பாறை பகுதியில் 10க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை ஒருவர் அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்ள பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்நிலையில் கடந்த வருடம் தென்மேற்கு பருவ மழையால் பூமியில் பிளவு ஏற்பட்ட தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வரும் 30ம் தேதி முதல் பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், பூமி பிளவு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வருவாய் துறை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.