Press "Enter" to skip to content

கரூர் அருகே கார்-சரக்கு பார வண்டி (லாரி) நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!

கரூர்: கரூர் அருகே காரும் சரக்கு பார வண்டி (லாரி)யும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் கீழமாயனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 பேருடன் இன்று காலை முசிறியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அவர்களது கார், மகாதானபுரம் கல்லெண்ணெய் (பெட்ரோல்) பங்க் அருகில் சென்றபோது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்துகொண்டிருந்த சின்ன (மினி) பார வண்டி (லாரி) மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 2 ஆண் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாயனூர் காவல் துறையினர் உயிரிழந்த 6 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பார வண்டி (லாரி) ஓட்டுர முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காரில், கிருஷ்ணமூர்த்தி, கோமதி, அருணா, சிவா, நவீன், சாந்தகுமார், கிஷோர், மற்றும் ஆறு மாத குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் இருந்தது தெரியவந்துள்ளது. 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran