Press "Enter" to skip to content

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் சுவாமியை பார்வை செய்துவிட்டு கிரிவலம் வருகின்றனர். அவ்வாறு கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாதம் (வைகாசி) பவுர்ணமி நாளை (சனி) அதிகாைல 4.32 மணிக்கு தொடங்கி, மறுநாள்(ஞாயிறு) அதிகாலை 3.40 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: Dinakaran