Press "Enter" to skip to content

நாகர்கோவிலில் அதிகரிக்கும் நெருக்கடி… போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும்எந்திர இருசக்கரக்கலன் (பைக்), கார்கள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கார்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளை பறிமுதல் செய்வதில் காவல் துறையினர் தயக்கம் காட்டுகிறார்கள். நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணி 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடைய வில்லை. மாவட்ட கலெக்டரும் இதை கண்டு கொள்ளாமல் உள்ளார். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடைக்காக ேதாண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இந்த பிரச்சினைகள் காரணமாக வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இது தவிர தற்போது கோடை விடுமுறை என்பதால், மாநகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முறையான சாலை வசதிகள் இல்லாததால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் சிக்கி திணறி வருகின்றன. காலை மற்றும் மாலை வேளையில் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்த நெருக்கடிக்கு முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து வாகன பார்க்கிங், ஆட்டோ நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதும் காரணமாக உள்ளது. மாநகரில்எந்திர இருசக்கரக்கலன் (பைக்), கார்களில் வருபவர்கள் ஆங்காங்கே அவர்களின் இஷ்டத்துக்கு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். போலீசாரும் இதை கண்டு கொள்வதில்லை. கார்களை நிறுத்துபவர்கள் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களாக இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக ஒரு வழிப்பாதை திட்டம் அமுலுக்கு வந்தது. ஆனால் இப்போது அதை கடைபிடிப்பதில்லை. கனரக மற்றும் மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் அத்துமீறுகின்றன. சாலையில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார்கள்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளை காவல் துறையினர் மீட்பு வாகனம் மூலம் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு சாமான்ய மக்கள் வரவேற்பு தெரிவித்தாலும் கூட விஐபிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை கைவிட்டனர். பல வர்த்தக நிறுவனங்கள், காம்ப்ளக்சில் பார்க்கிங் வசதி கிடையாது. இங்கு வருபவர்கள் சாலையில் தான் கார்களையும்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளையும் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இவ்வாறாக நிறுத்தப்படும் கார், வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த 15ம்தேதி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் கான்வென்ட் எதிரில் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தேர்(கார்) ஒன்றின் டிரைவர் கவனக்குறைவாக முன்பக்க கதவை திறந்ததில், அந்த வழியாக வந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் இடித்து தாய், மகள் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகும் கூட அந்த பகுதியில் கார்கள், வாகனங்களை நிறுத்த காவல் துறையினர் தடை விதிக்கவில்லை.

அண்ணா பஸ் நிலைய ரோட்டில் வேப்பமூடு முதல் கணேசபுரம் விலக்கு வரை சாலையின் இருபுறமும் ஆட்டோக்களும், கார்களும், பகிர்வு ஆட்டோக்களும், சின்ன (மினி) பஸ்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன. இந்த பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி பாதசாரிகள் நடந்து செல்லவும், வாகனங்கள் முறையாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக ஜோசப் கான்வென்ட் எதிரில் கார்கள் நிற்பதால் கடும் இடையூறு ஏற்படுகிறது. இந்த கார்களை கணேசபுரம் சாலையில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறாக நிற்கும் கார்களை காவல்துறை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் ஆணையர் சரவணக்குமாருக்கு அனுப்பி உள்ள மனுவில், வேப்பமூடு பகுதியில் இருந்த டாக்சி ஸ்டாண்ட்டை அகற்றுமாறு 2002ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கின் முடிவில் 90 நாட்களுக்குள் அதை மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் 2018ம் ஆண்டு தான் மாற்றப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை மேற்ெகாண்டமைக்காக எங்கள் அமைப்பு சார்பில் பாராட்டுகிறோம். இதே போல் நகரில் நீதிமன்ற சாலை, பொதுப்பணித்துறை சாலை, வடசேரி உழவர் சந்தை முதல் வடசேரி சந்தை வரை உள்ள சாலை, ஒழுகினசேரி முதல் வடசேரி கிளப் வரை உள்ள சாலை, வடசேரி சந்திப்பு முதல் வடசேரி வி.ஏ.ஓ. அலுவலகம் வரை உள்ள சாலை, நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் சந்திப்பு முதல் பார்வதிபுரம் ஐயப்பன் கோயில் வரையிலான சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும். கோட்டார் கவிமணி பள்ளி முதல் சவேரியார் கோயில் சந்திப்பு வரை உள்ள சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தொடர்வண்டித் துறையால் விலை கொடுத்து வாங்கப்பட்ட கோட்டார் ரோட்டில் பார வண்டி (லாரி), டெம்போ, சின்ன (மினி) ஆட்டோக்கள் நிறுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »