Press "Enter" to skip to content

உத்தரபிரதேசத்தில் பஸ்-டிராக்டர் மோதல்:5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் இன்று காலை பஸ் ஒன்று டிராக்டர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் இன்று காலை  லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில்,  பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பஸ், திடீரென  சாலையின் ஓரம் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர் டிராலி மீது மோதியது. பின்னர் பஸ் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

Related Tags :

Source: Maalaimalar